ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பிறகு மலையாள சினிமாவில் பாலியல் குற்றச்சாட்டு தலைவிரித்தாடுகிறது. பல திரைப்பிரபலங்கள் மீது நடிகைகள் குற்றம் சாட்டி வருகின்றனர். சிலர் மீது வழக்கும் பதிவாகி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் பெண் கலைஞர்களுக்கு பாலியல் சீண்டல் நடக்கிறது என குரல் கொடுத்தவர்களில் நடிகை ரீமா கல்லிங்கலும் ஒருவர். அதன்பின் தான் ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால் ரீமா நல்லவர் அல்ல போதை பார்ட்டி நடத்தியவர் என பாடகி சுசித்ரா குற்றம் சாட்டி உள்ளார்.
பாடகி சுசித்ரா அளித்த பேட்டி ஒன்றில், ‛‛நடிகை ரிமா கல்லிங்கல் சினிமா கேரியர் அடிபட்டதற்கு காரணமே அவர் நடத்திய போதை பார்ட்டி தான். அதில் பல இளம் பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டு போதைக்கு அடிமையானார்கள். கொச்சியில் ரீமா, அவரின் பாய் பிரண்ட் அபு ஆகியோர் வீட்டில் ரெய்டு நடந்தது. அவரை ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை. அவர்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கு என்ன செய்தார்கள். புதிது புதிதாக டிரக்ஸை கொண்டு வந்தார்கள். அவரின் பார்ட்டிக்கு போன மலையாள இசையமைப்பாளர்கள் பல பேர் என்னிடம் இதுபற்றி சொல்லியிருக்கிறார்கள்'' என்றார்.
இந்த விஷயம் வலைதளங்களில் விவாதமான நிலையில் சுசித்ரா மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக ரீமா கல்லிங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‛‛என் மீது பாடகி சுசித்ரா எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டி உள்ளார். அதுபோன்ற எந்த நிகழ்ச்சியையும் நாங்கள் நடத்தவில்லை. சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்கவுள்ளேன். அவர் மீது சிறப்பு விசாரணை குழுவில் புகார் அளித்துள்ளேன். அவர் மீது அவதூறு வழக்கு தொடர நோட்டீஸ் அனுப்பி உள்ளேன்'' என தெரிவித்துள்ளார்.