'ஜெயிலர், லியோ' வசூல் சாதனை முறியடிக்கப்படுமா? | ஜுனியர் என்டிஆரின் 10 வருட தொடர் வெற்றியைப் பறித்த 'வார் 2' | கேள்விகளுக்கு பயந்து ஒதுங்கி இருக்கும் நடிகை | ‛தண்டகாரண்யம்' தலைப்புக்கு அர்த்தம் தெரியுமா? | அடுத்து வர இருக்கும் படங்களில் ‛மதராஸி' மட்டுமே டாப் | மீண்டும் இணைந்து நடிக்கப் போகும் ரஜினி, கமல்? | நான்கு நாளில் ரூ.404 கோடி வசூலைக் கடந்த கூலி | பிளாஷ்பேக்: வித்தியாசமான சிந்தனையோடு 'வீணை' எஸ் பாலசந்தர் தந்த விளையாட்டு “பொம்மை” | இன்ஸ்டாவில் பின்தொடரும் ஏ.ஆர்.ரஹ்மான் ; மகிழ்ச்சியில் மஞ்சும்மேல் பாய்ஸ் இசையமைப்பாளர் | 25 நாட்களைக் கடந்த 'தலைவன் தலைவி' |
சினிமாவில் ஒரு பாட்டுக்கு நடனமாடும் டான்சராக அறிமுகமான பிரபுதேவா, நடனம் மாஸ்டராகவும் பணியாற்றி வந்தவர், அதன் பிறகு ஹீரோவாகி பின்னர் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி என பல படங்களை இயக்கினார். பின்னர் தெலுங்கு, ஹிந்தியிலும் படங்கள் இயக்கினார். சமீபகாலமாக மீண்டும் நடிகர் மட்டுமின்றி நடனம் மாஸ்டராகவும் பணியாற்றி வருகிறார். தற்போது விஜய்யின் கோட் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் பிரபுதேவா அளித்துள்ள ஒரு பேட்டியில், என்னுடைய பிள்ளைகள் இடத்தில் நான் அதிகமான பாசம் வைத்திருக்கிறேன். ஆனால் அது போன்ற தவறை யாரும் செய்யாதீர்கள். காரணம் பிள்ளைகள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்தால் அதன் பிறகு அவர்களுக்கு ஒரு சின்ன பிரச்னை ஏற்பட்டால் கூட அதை நம்மால் தாங்கிக் கொள்ளவே முடியாது. குறிப்பாக அவர்களை நன்றாக படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்று எந்நேரமும் அவர்களைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டே இருப்போம். இதனால் நம்முடைய வாழ்க்கையை நம்மால் நிறைவாக வாழ முடியாது. அதனால் தான் பிள்ளைகள் மீது அதிகப்படியான பாசம் வைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.