Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கறிதோசை, ஜிகர்தண்டா..: மதுரை நினைவுகளை பகிர்ந்த மாளவிகா மோகனன்

11 ஆக, 2024 - 03:08 IST
எழுத்தின் அளவு:
Karidosa,-Jigarthanda..:-Malavika-Mohanan-shares-memories-of-Madurai


விக்ரம் நடிப்பில் எதிர்பார்க்கப்படும் படம் 'தங்கலான்'. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். ஞானவேல் ராஜா படத்தை தயாரித்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக உருவாகியுள்ளது.

விக்ரம் கேரியரில் இந்த படம் முக்கியமானதாக கருதப்படுகிறது. இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிக் கொண்டே போன நிலையில் தற்போது ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட உள்ளனர்.

தங்கலான் பட புரமோஷன் நிகழ்ச்சிக்காக விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் மதுரை வந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் மாளவிகா மோகனன் கூறியதாவது: தனிப்பட்ட முறையில் மதுரை ரொம்ப பிடிக்கும். இந்தியாவிலேயே மிகச்சிறந்த உணவு வகைகள் மதுரையில் தான் இருக்கிறது. கறிதோசை, ஜிகர்தண்டா என இங்குள்ள உணவு வகைகள் ரொம்ப பிடிக்கும். உண்மையான உணவு வகைகளை சுவைக்க வேண்டும் என்றால் மதுரைக்குதான் வரவேண்டும். மதுரையில் ஆரம்பித்த தங்கலான் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கதிர் நடிக்கும் புதிய வெப் தொடர்!கதிர் நடிக்கும் புதிய வெப் தொடர்! தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை: நடிகர் சங்கம் முடிவு தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)