ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்ய லட்சுமி, மற்றும் பலர் நடிக்கும் படம் 'தக் லைப்'. இப்படத்திற்கான படப்பிடிப்புகள் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கூடவே, டப்பிங் பணிகளையும் சேர்த்து முடித்து வருகிறார்கள்.
இன்னும் சில கட்ட படப்பிடிப்புகள் நடைபெற வேண்டி இருக்கிறது. அதில் வெளிநாட்டு படப்பிடிப்புகளும் அடங்கும் என்கிறார்கள். இந்நிலையில் நடிகர் நாசர், நடிகை அபிராமி ஆகியோர் இப்படத்தில் இணைவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
கமல்ஹாசன் நடித்த பல படங்களில் நாசர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து நடிக்கும் அடுத்த படம் இது. நடிகை அபிராமி 'விருமாண்டி' படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்தார். அந்த பொருத்தமான ஜோடி பற்றி இன்று வரையிலும் பேசப்பட்டு வருகிறது. 20 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்கும் ஒரு படத்தில் மீண்டும் பங்கேற்கிறார் அபிராமி. சமீபத்தில் வந்த 'மகாராஜா' படத்தில் நடித்த அபிராமி 'வேட்டையன்' படத்திலும் நடித்துள்ளார்.