இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் நிலவிய லஞ்ச ஊழல்களை சுட்டிக்காட்டி அவற்றுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக கடந்த 28 வருடங்களுக்கு முன்பு ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவான படம் இந்தியன். இத்தனை வருடங்கள் கழித்து சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன் 2 என்கிற பெயரில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள இந்த படத்தில் தமிழகத்தின் அரசியல் மற்றும் அரசாங்க நிர்வாகங்களை பட்டும் படாமல் தொட்டு விட்டு பிற மாநிலங்களில் நடக்கும் ஊழல்களை மட்டுமே பெரிய அளவில் காட்டினார்கள்.
அதேசமயம் போகிற போக்கில் யாரை தொட்டால் பிரச்சனை இருக்காதோ அவர்களை எல்லாம் இந்தியன்-2 படத்தில் வம்புக்கு இழுத்திருக்கிறார்கள். அதில் தமிழகமெங்கும் தற்போது அரசாங்க அலுவலகத்திற்கு மக்கள் அலைய தேவை இல்லாமல் தங்களது ஊரிலேயே அரசின் அடையாள அட்டைகளையும் அரசின் நலத்திட்டங்களையும் பெறுவதற்காக இயங்கி வரும் இ சேவை அமைப்புகளை பற்றி இந்த படத்தில் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள். குறிப்பாக இவர்கள் சேவைக்காக அல்லாமல் அதிக பணத்திற்காக ஆசைப்பட்டு மக்களை அலைக்கழிக்கிறார்கள் என்கிற விதமாக இந்த படத்தில் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இந்த நிலையில் இந்த இ சேவை மைய சங்கத்தை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் மத்தியில் தங்கள் மீது தப்பான அபிப்பிராயம் ஏற்படும் விதமாக தங்களை தவறாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் என்றும் இதைவிட வெளிச்சம் போட்டு தோலுரித்து காட்ட வேண்டிய பல விஷயங்களை தொடாமல் தேவையில்லாமல் மக்கள் சேவை செய்து வரும் தங்களை செய்துள்ளார்கள் என்றும் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழக அரசு இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.