பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
2024ம் ஆண்டில் அடுத்த சில மாதங்களில் வெளியாக உள்ள சில முக்கிய படங்களைப் பற்றிய ரிலீஸ் அப்டேட்டுகள் வெளியாகி விட்டன. ஆனால், ஒட்டு மொத்த திரையுலகமும், ரசிகர்களும் எதிர்பார்க்கும் ஒரே படமாக இருப்பது 'வேட்டையன்'. ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை தசெ ஞானவேல் இயக்கி வருகிறார்.
அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை அக்டோபர் மாதம் வெளியிடுகிறோம் என்று மட்டும் தயாரிப்பு நிறுவனமான லைகா ஏப்ரல் மாதம் அறிவித்தது.
அக்டோபர் 10ம் தேதி சூர்யா நடிக்கும் 'கங்குவா', அக்டோபர் 31 சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' ஆகிய படங்கள் வெளியாகிறது என அறிவித்துவிட்டார்கள். அதனால், 'வேட்டையன்' படத்தின் வெளியீட்டுத் தேதியை தயாரிப்பு நிறுவனம் உடனே அறிவிக்க வேண்டுமென ரஜினி ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.