மலையாளத்தில் மோகன்லாலை வைத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் ஜீத்து ஜோசப். அந்த வகையில் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டாலும், பெரிய ஹீரோக்கள் இவரது படங்களின் நடிக்க வரிசையில் நின்றாலும் கூட தான் உருவாக்கும் கதைக்கு எந்த ஹீரோ தேவைப்படுகிறாரோ அவரை மட்டுமே வைத்து படம் இயக்கும் எண்ணம் கொண்டவர் ஜீத்து ஜோசப். அந்த வகையில் திரிஷ்யம் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றபோது அதற்கடுத்து இளம் நடிகராக ஆசிப் அலியை வைத்து கூமன் என்கிற படத்தை இயக்கினார்.
கடந்த வருடம் மோகன்லாலை வைத்து நேர் என்கிற ஹிட் படத்தை கொடுத்த ஜீத்து ஜோசப் அதைத் தொடர்ந்து மின்னல் முரளி பட இயக்குனரும் வளர்ந்து வரும் நடிகருமான பஷில் ஜோசப்பை வைத்து தற்போது நுணக்குழி என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மோகன்லால் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக கிரேஸ் ஆண்டனி மற்றும் சுவாசிகா ஆகியோர் நடித்துள்ளனர்.