காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'இந்தியன் 2'. இப்படம் அடுத்த மாதம் ஜூலை 12ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
கடந்த நான்கைந்து வருடங்களாகத் தயாரிப்பில் இருந்த படம் பல்வேறு சிக்கல்களைக் கடந்து வெளியீடு வரை வந்துவிட்டது. நாளை இப்படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. அதற்கான விழா நாளை காலை சென்னையில் உள்ள பிரபல தியேட்டர் ஒன்றில் நடைபெற இருக்கிறது.
ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணி முதலில் இணைந்த 'இந்தியன்' படம் 1996ம் ஆண்டு வெளிவந்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு அக்கூட்டணி மீண்டும் இரண்டாம் பாகத்தில் இணைகிறது. நிறைய நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் இருக்கிறார்கள்.
அப்போதே பிரம்மாண்ட இயக்கத்திற்குப் பெயர் போன ஷங்கர், தற்போது இன்னும் பிரம்மாண்டமாக எடுத்திருப்பார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.
டிரைலர்கள் என்றாலே விஜய், அஜித் படங்கள்தான் யு டியூபில் போட்டி போட்டு சாதனை படைக்கும். அதை நாளை வெளியாக உள்ள 'இந்தியன் 2' முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.