பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் வரலட்சுமி சரத்குமார். அவருக்கும் மும்பையைச் சேர்ந்த நிக்கோலய் சச்தேவ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த மார்ச் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
சமீபத்தில் சென்னையில் உள்ள அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோருக்கு தன் குடும்பத்தாருடன் சென்று திருமண அழைப்பிதழ் தந்தார் வரலட்சுமி. அடுத்து ஐதராபாத் சென்று அங்குள்ள பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்தார்.
ஜூலை 2ம் தேதி வரலட்சுமி, நிக்கோலய் திருமணம் தாய்லந்து நாட்டில் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளார்களாம். அதற்கடுத்து ஜூலை 3ம் தேதி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம்.
திருமணத்திற்குப் பிறகும் வரலட்சுமி சினிமாவில் தொடர்ந்து நடிக்க உள்ளார்.