பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
இந்த மாதம் தமிழ் திரையுலகில் பிரபலங்களின் திருமண வாரம் என்று சொல்லும் விதமாக பல பிரபலங்களின் திருமணம் விமரிசையாக நடைபெற்றுள்ளன. அந்த வகையில் கடந்த வருடம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற குட் நைட் படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகரனுக்கு நேற்று பிரியா என்பவருடன் இனிதே திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்த தகவலை தனது திருமண புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார் விநாயக் சந்திரசேகரன்.
இந்த திருமணத்தில் நடிகர் மணிகண்டன் உள்ளிட்ட குட்நைட் படக்குழுவினர் மற்றும் சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
இவர் இயக்கிய குட் நைட் திரைப்படம் அவருக்கு மட்டுமல்ல, அதில் கதாநாயகனாக மணிகண்டனின் திரையுலக வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து விநாயக் சந்திரசேகரன் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டு வந்தாலும் அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் வெற்றிப்படத்தை கொடுத்த கையோடு தற்போது திருமணத்தையும் முடித்துள்ள விநாயக் சந்திரசேகரன் விரைவில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.