நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் |
இயக்குனர் பாலா இயக்கும் படங்களில் நடிக்கும் ஹீரோக்கள், பாலாவின் கைவண்ணத்தில் அதுவரை இல்லாத வகையில் தங்களிடம் இருக்கும் திறமைகளை முழுதாக வெளிப்படுத்தி அந்தப் படங்களின் மூலம் மிகப் பெரிய உயரத்திற்கு சென்றுள்ளார்கள். விக்ரம், சூர்யா, ஆர்யா, அதர்வா என ஒரு பெரிய பட்டியலே உள்ளது. அதேபோல அவருடைய படங்களில் நடிக்கும் புதுமுக நடிகர்கள் கூட மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெறுவார்கள். அந்த வகையில் பிதாமகன் படத்தில் வில்லனாக நடித்த மகாதேவன் 'பிதாமகன் மகாதேவன்' என்று அழைக்கப்பட்டார்.
அதேபோல வெறும் ஸ்டண்ட் கலைஞராக இருந்த ராஜேந்திரன் நான் கடவுள் படத்தில் நடித்ததன் மூலம் நான் கடவுள் ராஜேந்திரன் என்று அழைக்கப்படும் அளவிற்கு பிரபலமானார். இப்போது வரை அவரது திரையுலாக் பயணம் பிசியாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தற்போது வணங்கான் படத்தில் நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவியும், நடிகை வரலட்சுமியின் தாயாருமான சாயாவை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அறிமுகப்படுத்தியுள்ளார் பாலா. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள தனது அம்மா சாயாவுடன் வந்த வரலட்சுமி இந்த தகவலை வெளிப்படுத்தினார்.