துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாகவும், ஒரு பாடலுக்கு ஆடியவருமான அனுராதா ஒருசமயம் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார் என்பது சுவாரஸ்மான தகவல். ஒரு காலத்தில் வெள்ளிவிழா படங்களாக கொடுத்த ஸ்ரீதர், தன் கடைசி காலத்தில் தொடர் தோல்வி படங்களை கொடுத்தார். அப்படிப்பட்ட படங்களில் ஒன்று 'மோகன புன்னகை'. இந்த படத்தில் சிவாஜி நாயகனாக நடித்தார். அவர் காதலிக்கும் பெண்களாக கீதா, பத்மபிரியா, ஜெயபாரதி, மற்றும் அனுராதா நடித்தனர்.
சிவாஜியை ஒரு தலையாக அனுராதா காதலிப்பார். ஆனால் சிவாஜி தனக்கு பல காதல் தோல்விகள் இருந்ததால் அதனை மறுத்து இன்னொருவருக்கு அனுராதாவை திருமணம் செய்து வைப்பார். இந்த படத்தில் இவர்களுடன் மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், சின்னி பிரகாஷ் உள்பட பலர் நடித்திருந்தனர். பெரும்பாலான படம் இலங்கையில் படமாக்கப்பட்டிருந்தது. படத்தின் கதை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. படமும் தோல்வி அடைந்தது.