தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
சென்னையில் நேற்று நடந்த 'தி வெர்ட்டிக்ட்' பட விழாவுக்கு கையில் சின்ன பிளாஸ்திரி கட்டுடன் வந்திருந்தார் வரலட்சுமி. என்னாச்சு? பாடி பில்டரான கணவருடன் சண்டையா? என்று அதை பார்த்து சிலர் கிண்டல் செய்ய, ''ஒரு சண்டை காட்சியில் நடித்தபோது விபத்து ஏற்பட்டுவிட்டது. நான் சரியாக இருந்தேன், எதிர்தரப்பு தவறு செய்ததால் எனக்கு அடி. இப்போது தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடிக்கிறேன்.
அதிக நாட்கள் ஐதராபாத்தில் இருக்கிறேன். படப்பிடிப்பு இல்லை என்றால் மும்பைக்கு கணவர் வீடு செல்கிறேன். தமிழ் பட வேலைகள், குடும்ப விஷயங்கள் என்றால் சென்னை என பிஸியாக இருக்கிறேன். தமிழில் விஜய்சேதுபதி மகன் நடிக்கும் 'பீனிக்ஸ்' படத்தில் 'சண்டக்கோழி 2' பாணியில் வில்லத்தனமான ரோலில் நடிக்கிறேன். மற்றபடி நிஜ வாழ்க்கையில் எந்த சண்டையும் இல்லை. இப்போது சந்தோஷமாக இருக்கிறேன்'' என்கிறார்.