டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பஹத் பாசில் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'புஷ்பா 2'. இப்படத்தின் வெளியீடு ஆகஸ்ட் 15 என எப்போதோ அறிவித்தார்கள்.
ஆனால், கடந்த சில தினங்களாக இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. அதன் காரணத்தால் அக்ஷய்குமார் நடித்துள்ள ஹிந்திப் படமான 'கேல் கேக் மெய்ன்' படத்தை அன்றைய தினம் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். அடுத்து விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' படத்தையும் அதே தினத்தில் வெளியிடலாம் என்றும் முடிவு செய்துள்ளார்களாம்.
'புஷ்பா 2' வெளியீடு தள்ளிப் போகிறது என பாலிவுட், டோலிவுட் வட்டாரங்களுக்குத் தெரிய வந்ததால்தான் மேலே சொன்ன இரண்டு படங்களையும் அந்த தினத்தில் வெளியிட நாள் குறித்துள்ளார்கள் என்கிறார்கள்.
'புஷ்பா 2' படத்தின் வேலைகள் இன்னும் முழுமையாக முடியாத காரணத்தால்தான் வெளியீடு தள்ளிப் போகிறதாம்.




