ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
மலையாள முன்னணி நடிகர் பிரித்விராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லாலை வைத்து இயக்கிய லூசிபர் என்கிற படத்தின் மூலம் ஒரு வெற்றிகரமான இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தினார். அந்த சமயத்தில் லூசிபர் படம் வெளியான போது அதுதான் மலையாள திரையுலகிலேயே அதிகம் வசூலித்த படம் என்கிற பெருமையும் பெற்றது. அதைத் தொடர்ந்து லூசிபர் படத்திற்கு இரண்டாம் பாகமும் இருக்கிறது என்று இவர்கள் கூறிய நாளிலிருந்து அந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் தற்போது லூசிபர் 2வில் இரண்டாம் பாகமாக எம்புரான் என்கிற படத்தை துவங்கி படப்பிடிப்பை நடத்தி வருகிறார் பிரித்விராஜ்.
இந்த படத்தில் ஏற்கனவே முதல் பாகத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் தவிர பல புதிய நடிகர்களும் அவ்வப்போது இணைந்து வருகின்றனர். அந்த வகையில் கைதி, விக்ரம் ஆகிய படங்களில் வில்லனாக கவனிக்க வைத்து, தற்போது கதாநாயகனாகவும் நடித்து வரும் அர்ஜூன் தாஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். படப்பிடிப்பில் இருந்து இவரது புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் கசிந்து அவர் இந்த படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. அந்த வகையில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் முதல் மலையாள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.