சினிமாவிலும் கை வைத்த டிரம்ப்: இந்தியப் படங்களுக்குப் பெரும் பின்னடைவு | தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் |
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நேற்று 81வது பிறந்தநாள். இதையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது ஸ்டுடியோ முன்னால் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ரசிகர்களும் திரையுலகினரும் திரண்டனர். அவர்களை இளையராஜா சந்தித்தார். பலருடன்புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இளையராஜா மகளும், பின்னணி பாடகியுமான பவதாரினி உடல்நலக்குறைவு ஏற்பட்டு இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனால் இளையராஜா இந்த பிறந்தநாளில் உற்சாகமாக காணப்படவில்லை. பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் ''எல்லோரும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்கிறீர்கள். ஆனால் எனது மகளை நான் பறிகொடுத்த காரணத்தினால் எனக்கு இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை'' என்றார்.
இதனிடையே சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் துணை தூதர் ஒலெக் அவ்டீவ், இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இளையராஜாவின் பிறந்தநாளில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துவதற்காக வந்தேன். அவர் ரஷ்யாவின் மிகச்சிறந்த நண்பர். மாஸ்கோவில் இளையராஜாவின் இசை கச்சேரியை நடத்த திட்டமிட்டுள்ளோம். ரஷ்ய இசை கலைஞர்களை வைத்து சிம்பொனி இசை நிகழ்ச்சியை இளையராஜா நடத்துவார். இந்த நிகழ்ச்சியை வரும் ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.