‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் |
நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி என்ற படத்தயாரிப்பு நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் வாங்கிய கடன் 21.29 கோடியை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இந்த கடனை திருப்பி செலுத்தும் விதமாக விஷால் நடிக்கும், தயாரிக்கும் படங்களின் வியாபாரத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தந்தைத்த விஷால் மீறியதாக லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2021ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நடிகர் விஷால் 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், அவர் தனது சொத்து விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்தது.
இதற்காக விஷால் மற்றும் லைகா நிறுவனத்துக்கு இடையிலான பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக ஆய்வு செய்ய ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணா என்பவரை ஐகோர்ட்டு நியமித்தது. மேலும், 3 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கு மற்றும் தற்போதைய வங்கி கணக்கு விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணா, லைகா மற்றும் விஷாலுக்கு இடையிலான பணப்பரிவர்த்தனைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையை ஆராய வேண்டியிருப்பதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.