வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
சினிமாவுக்கு இணையாக ஓடிடி தளங்களும் வளர்ந்து விட்ட நிலையில் சிறிய படங்களுக்கு கூட அது நம்பிக்கை தருவதாக கடந்த சில வருடம் முன்பு வரை இருந்தது. ஆனால் சமீபகாலமாக மிகப்பெரிய படங்களை கூட சில ஓடிடி நிறுவனங்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டுவதும் பின்னர் பேரம் பேசி குறைந்த விலைக்கு வாங்குவதும் என சூழல் மாறி உள்ளது. பெரிய படங்களுக்கே இப்படி என்றால் ஓடிடியை பெரிதாக நம்பி உள்ள சின்ன பட்ஜெட் படங்களின் நிலை ரொம்பவே கவலைக்கிடமாக இருக்கிறது என்று நடிகர் விஷால் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல தற்போது ஏப்ரல் மாதமே இன்னும் முடியாத நிலையில் அனைத்து ஓடிடி தளங்களும் இந்த வருடத்திற்கான தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வரையறைக்குள் (பட்ஜெட்டுக்குள்) படங்களை வாங்கி முடித்து விட்டன என்றும், இன்னும் எட்டு மாதங்களுக்கு எந்த புது படங்களையும் அவர்கள் வாங்கப் போவதில்லை என்றும் கூறி ஓடிடி தளங்கள் தங்களது கதவை அடைத்து விட்டன என்று சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல் ஒன்றை பகிர்ந்து உள்ளார் விஷால்.
மும்பையில் ஓடிடி வட்டாரத்தில் உள்ள தனது நண்பர்கள் மூலமாக இந்த தகவல் தனக்கு அதிகாரப்பூர்வமாக தெரிய வந்ததாகவும், சிறிய பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள், அடுத்த ஐந்து மாதங்களில் பத்து பெரிய படங்கள் வெளியாக இருப்பதால் தங்களது படங்களை இன்னும் ஆறு மாதம் கழித்து ரிலீஸ் செய்தால் ஓரளவுக்கு தப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.