லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பிறகு நடிகர் சங்க நிர்வாகத்தில் நடந்த குழப்பங்கள், தேர்தல்கள், வழக்குகளால் 40 சதகிவித பணியோடு சங்க கட்டிடம் நின்று போனது. முன்பு திட்டமிட்டடதை விட இப்போது கட்டித்தின் பட்ஜெட் இரண்டு மடங்கு உயர்ந்து விட்டது.
இதனால் நடிகர் சங்கம் தற்போது முன்னணி நடிகர் நடிகைகளிடம் நிதி கேட்டு வருகிறது. அதோடு வெளிநாட்டில் கலை நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிட்டு வருகிறது. நடிகர்கள் கமல், விஜய், உதயநிதி ஆகியோர் கட்டிட நிதியாக தலா ரூ.1 கோடி வழங்கி உள்ளனர்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் கட்டிட நிதியாக 50 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். இது குறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளை தொடர்வதற்காக சங்கத்தின் வைப்பு நிதியாக தனது சொந்த வருமானத்திலிருந்து 50 லட்சத்திற்கான காசோலையை நடிகர் சங்க தலைவர் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது'' என்று கூறியுள்ளார்.