மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள திரையுலகின் இளம் இயக்குனர், நடிகர் வினீத் சீனிவாசனுக்கு என தனியாக ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. தமிழகத்தில் கூட இவரது படங்களுக்கு என ஒரு வரவேற்பு இருக்கிறது. சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள 'வருஷங்களுக்கு சேஷம்' திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் என்கிற படத்தில் நடித்திருந்தார். இதில் வில்லத்தனம் கலந்த ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிப்பில் புதிய பரிமாணம் காட்டி இருந்தார் வினித் சீனிவாசன்.
அதே சமயம் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் போன்ற கதைகளை என்னால் ஒருபோதும் யோசிக்கக்கூட முடியாது. என்னுடைய பாதை அது அல்ல. அதேசமயம் ஒரு நடிகராக அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதில் எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. இத்தனைக்கும் அந்த படத்தின் இயக்குனர் அபினவ் சுந்தர் நாயக் என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான். என் உதவியாளர் என்பதால் என்னைப் போன்றே தான் படங்கள் பண்ண வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவருடைய சிந்தனை வேறு. என்னுடைய சிந்தனை வேறு” என்று கூறியுள்ளார் வினீத் சீனிவாசன்.