ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் மகன் ராம் சரண். பிசியான இளம் நடிகர், 2007ம் ஆண்டு 'சிறுத்தா' என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகில் அறிமுகமானார். தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் 'மகதீரா' என்ற படத்தில் நடித்தார். கடைசியாக 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்தார். தற்போது ஷங்கர் இயக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார். ராம் சரண் நடிகர் என்றதோடு மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், சமூக சேவகர், தொழில் முனைவோர் என்று பல அவதாரங்களை எடுத்தார். ராம் சரணின் திரைத்துறை, சமூகநலன் சார்ந்த பணி ஆகியவற்றில் இவரது சேவையைப் பாராட்டி வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.