இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! |
பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி கடந்த வருடம் சினிமா தயாரிப்பிலும் காலடி எடுத்து வைத்தார். ஐபிஎல்.,லில் சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதாலோ என்னவோ தமிழ் சினிமா மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் தனது முதல் படத்தை தமிழிலேயே தயாரித்தார். ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா நடிப்பில் எல்ஜிஎம் (லெட்ஸ் கெட் மேரீட்) என்கிற பெயரில் அந்த படம் வெளியானது.
தோனியின் முதல் தயாரிப்பு என்கிற எதிர்பார்ப்புடன் வெளியான அந்த படம் வெற்றியைப் பெற தவறியது. இதனைத் தொடர்ந்து ஒரு வருட இடைவெளி விட்டிருந்த தோனி தற்போது தனது இரண்டாவது படத்தின் தயாரிப்பு பணிகளை முடுக்கிவிட்டு உள்ளாராம். ஆனால் இந்த முறை கன்னட திரை உலகில் தனது இரண்டாவது படத்தை தயாரிக்கிறாராம் தோனி. இதற்கான இயக்குனர் மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.