ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் |
தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் மிஷ்கின், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் திரைப்படம் 'டிரெயின்'. சென்னையில் டிரெயின் அரங்கம் அமைத்து இதன் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.
இந்த படத்தை சமீபத்தில் அறிவித்த பிறகு இந்த புதிய கூட்டணியின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நாசர் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நாசர் நிறைய தமிழ் படங்களில் குணசித்திர வேடத்திலும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்தவர். ஆனால், சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின் இந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்க உள்ளார்.