அந்தக்காட்சியில் கட்டாயப்படுத்தி நடிக்க வைக்கப்பட்டேன் : நடிகை மோகினி | சிவகார்த்திகேயனை வாழ்த்திய ரஜினி: ஏ.ஆர்.முருகதாசை புறக்கணித்தாரா? | மும்பையில் கைது செய்யப்பட்ட மஞ்சு வாரியர் பட இயக்குனர் ஜாமினில் விடுதலை | கேரளாவில் காந்தாரா 2ம் பாகத்தை வெளியிடுவதில் புதிய சிக்கல் | நானும் ஐஸ்வர்யா ராயும் ரூம் மேட்ஸ் : ஸ்வேதா மேனன் ஆச்சரிய தகவல் | தீனா படத்திற்கு பிறகு மதராஸி படத்தில் வேண்டுதலை நிறைவேற்றிய ஏ.ஆர்.முருகதாஸ் | சிரஞ்சீவி - நயன்தாரா படக்குழுவை சந்தித்த விஜய் சேதுபதி படக்குழு | ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வழக்கு: புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி மனு | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! |
இதுவரை 750 படங்களுக்கு மேல் நடித்து விட்டார் நாசர். குணசித்ரம் மற்றும் வில்லன் வேடங்களில் அதிகமாக நடித்துள்ளார். மாயன், அவதாரம் உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் பல வருட இடைவெளிக்கு பிறகு அவர் தற்போது 'கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி' என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
நாசர் நாயகனாக நடித்த 'அவதாரம்' படத்திற்கு இசை அமைத்த இளையராஜா இந்த படத்திற்கும் இசை அமைக்கிறார். படத்தை, எக்ஸ்போரியா ஐஜீன் புரொடக்ஷன்ஸ், ஜென் வெர்ஸ் மற்றும் எம்பர்லைட் ஸ்டுடியோஸ் சார்பில் சசி நாகா,சுரேஷ் செல்வராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள்.
தனபால் பத்மநாபன் எழுதி இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது " கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரான படங்களுக்கு எப்பவும் மக்களிடத்தில் மதிப்பு அதிகம் இருக்கும். அன்று தொடங்கி இன்று, 'லப்பர் பந்து, குடும்பஸ்தன், டூரிஸ்ட் பேமிலி' போன்ற படங்கள் வரை மாபெரும் ஹிட் படங்களாக மக்கள் கொண்டாடுகிறார்கள். அந்த வகை படமாக 'கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி' உருவாகி வருகிறது.
தந்தை - மகன் உறவு பற்றிய நெகிழ்ச்சி மிகுந்த இக்கதையின் நாயகனாக நாசர் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடை பெற்று வருகிறது" என்றார்.