ஆக., 22ல் ரீ-ரிலீஸாகும் 'கேப்டன் பிரபாகரன்' | மம்முட்டி, பவன் கல்யாண் வரலாற்று படங்களின் இரண்டு இயக்குனர்களுக்கும் ஒரே போல நடந்த சோகம் | செல்போனை பறித்தாரா அக்ஷய் குமார் ? உண்மையை வெளியிட்ட லண்டன் ரசிகர் | 'டகோய்ட்' படப்பிடிப்பில் ஆத்வி சேஷ்-மிருணாள் தாக்கூர் காயம் | ஜிம்முக்கு போகாமலேயே 26 கிலோ எடை குறைத்த போனி கபூர் | ரஜினியின் 'கூலி': அமெரிக்காவில் ஐந்தே நிமிடத்தில் 15 லட்சம் ரூபாய்க்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன! | மாரீசன் பற்றி மனம் திறந்த பஹத் பாசில் | திருமணம் எப்போது? நித்யா மேனன் சொன்ன பதில் | செப்டம்பரில் தொடங்கும் 'பிக்பாஸ் சீசன்-9' | என்னால் 12 மணிநேரம் கூட பணிபுரிய முடியும்! - நடிகை வித்யா பாலன் |
கமல்ஹாசன் நடத்தி வரும் ராஜ்கமல் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் நடிகர், நடிகைகளை தேர்வு செய்வதாக அடிக்கடி மோசடி புகார் வரும், இதுகுறித்து ராஜ்கமல் இன்டர்நேஷனல் அடிக்கடி எச்சரிக்கை செய்யும். இந்த நிலையில் தனது பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கமல்ஹாசனின் இளைய மகளும், நடிகையும், ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவருமான அக்ஷரா ஹாசன் புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது “இப்ராகிம் அக்தர் என்ற நபர் என்னுடைய பெயர் மற்றும் என் குடும்பத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, ஊட்டி பகுதியில் அலுவலகம் நடத்தி வருகிறார். மேலும், எங்களது பெயரை பயன்படுத்தி, நாங்கள் சினிமா தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறோம் என்று பொய்யான தகவலை தெரிவித்து வருகிறார். அவர் கூறும் அனைத்தும் தவறானவை. எங்களுக்கும் அவருக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. இந்த விவகாரம் குறித்து சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தயவுசெய்து எல்லோரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்த நபருடன் தொடர்பு கொள்ள வேண்டாம்” என்று கூறியுள்ளார்.