அகண்டா 2 படத்தின் முதல் நாள் வசூல் ரூ.59.50 கோடி | நடிகை பாலியல் கடத்தல் வழக்கு : ஆறு பேருக்கு 20 வருட சிறை | ஜெயிலர் 2 புது அப்டேட் வராது ஏன்? | 'ஹேப்பி ராஜ்' இரண்டு குடும்பங்களின் கதை | பிரீத்தி அஸ்ராணிக்காக கதையை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக் : கன்னட எழுத்தாளர் கதையை படமாக்கிய கே. பாக்யராஜ் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே கிராமத்தில் எடுக்கப்பட்ட படம் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் பார்வதி நாயர் படம் | மீரா மிதுன் மீதான வன்கொடுமை வழக்கை தள்ளுபடி செய்ய கோர்ட் மறுப்பு | திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த் |

மலையாளத்தில் மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான 'திரிஷ்யம்' படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் பாகத்தில் இருந்து இப்போதைய மூன்றாம் பாகம் வரை மோகன்லால், மீனா, போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்த ஆஷா சரத் ஆகியோர் தொடர்ந்து இடம் பிடித்து வருகின்றனர்.
அதேசமயம் கடந்த இரண்டாம் பாகத்தில் பிரபல மலையாள நடிகரான முரளி கோபி ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக படத்தில் புதிதாக இணைந்திருந்தார். ஒரு நாவலாசிரியர் கதாபாத்திரத்தில் நடிகர் சாய்குமார் கதைக்கு திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த மூன்றாம் பாகத்தில் தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மோகன்லாலுடன் இவர் படப்பிடிப்பின் போது இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இதை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு முன் 'ஜெயிலர்' படத்தில் இவர்கள் இருவரும் நடித்திருந்தாலும் ஒரு காட்சியில் கூட இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.