வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

கடந்த 2017ல் பிரபல மலையாள நடிகை ஒருவர் கேரளாவில் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக நடிகர் திலீப் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் நடிகர் திலீப் மூன்று மாதம் சிறைவாசம் அனுபவித்து பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை முடித்து, நடிகர் திலீப் உள்ளிட்ட மூவர் இந்த வழக்கில் குற்றமற்றவர்கள் என கூறி விடுவித்தது. இந்த வழக்கின் முதன்மை குற்றவாளி பல்சர் சுனில் உள்ளிட்ட மீதி ஆறு பேர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த ஆறு பேருக்கான தண்டனையை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதன்படி ஆறு பேரும் 20 வருடங்களுக்கு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதமாக தலா ரூபாய் 50,000 செலுத்த வேண்டும் என்றும் தவறினால் அதற்காக இன்னும் ஒரு வருடம் அதிகம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் முதன்மை குற்றவாளியான பல்சர் சுனிலுக்கு இன்னொரு பிரிவின் கீழ் ஐந்து வருடம் கூடுதல் தண்டனை வழங்கப்பட்டாலும் ஒரே சமயத்தில் இந்த இரு தண்டனைகளையும் அனுபவிக்க வேண்டும் என்பதால் அவருக்கும் மொத்தமே 20 வருடம் தண்டனை காலம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.




