மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் |

கடந்த 2013ம் ஆண்டில் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்து வெளிவந்த படம் 'திரிஷ்யம்'. இந்த படத்தின் மாபெரும் வெற்றியால் இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்தனர். தமிழில் கமல்ஹாசன் 'பாபநாசம்' எனும் பெயரில் ரீமேக் செய்தார்.
அதன்பிறகு கடந்த 2021ம் ஆண்டில் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் 'திரிஷ்யம் 2' கொரோனா காலகட்டத்தினால் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. ஹிந்தி, தெலுங்கிலும் ரீ-மேக் ஆனது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரிஷ்யம் 3ம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஒரே கட்டமாக முழு படப்பிடிப்பையும் நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்தனர். இதன் தெலுங்கு மற்றும் ஹிந்தி ரீமேக் பணிகளும் மறுபுறம் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் உலகளவில் இந்த படத்திற்கான தியேட்டர் உரிமைகளும் மற்றும் டிஜிட்டல், சாட்லைட் போன்ற தியேட்டர் உரிமை அல்லாத உரிமைகளையும் பென் ஸ்டுடியோஸ், பெனரோமா ஸ்டுடியோஸ் என இரு நிறுவனங்களும் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர்.