அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
இசைத்துறைக்காக வழங்கப்படும் விருதுகளில் கிராமி விருதுகள் உலக அளவில் உள்ள இசைக்கலைஞர்களாலும் உயர்ந்த விருதாக கருதப்படுகிறது. 66வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. அதில் 'சிறந்த குளோபல் இசை ஆல்பம்' விருதை இந்திய இசைக்குழுவான ஷக்தி வெளியிட்ட 'திஸ் மொமென்ட்' என்ற ஆல்பத்திற்குக் கிடைத்தது.
அந்த ஆல்பத்திற்கு இசை அமைத்த குழுவிற்கு ஏஆர் ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார். “இந்தியாவிற்கு கிராமி விருதுகள் மழையாய் பொழிந்துள்ளது. கிராமி வின்னர்ஸ், மூன்றாவது முறை பெறும் உஸ்தாத் ஜாகிர் உசேன், முதல் முறை விருது பெறும் சங்கர் மகாதேவன் மற்றும் செல்வகணேஷ் ஆகியோருக்கு வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜாகிர் உசேன் பிரபல தபேலா இசைக் கலைஞர் என்பது இசை ரசிகர்கள் அறிந்த ஒன்று. ஷங்கர் மகாதேவன் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் பாடல்களைப் பாடியவர். சென்னையைச் சேர்ந்த செல்வகணேஷ், 2008ல் வெளிவந்த 'வெண்ணிலா கபடிக் குழு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாமனர். தமிழில் மேலும் சில படங்களிலும், தெலுங்கில் சில படங்களிலும் இசையமைத்துள்ளார். பிரபல கடம் இசைக் கலைஞர் விக்கு விநாயக்ராமின் மகன் இவர்.