அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தற்காலிகமாக 'DNS' என அழைக்கப்படுகிறது. இதில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா, ஜிம் சார்ப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஐதராபாத் மற்றும் திருப்பதி பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்குகிறது. இதில் தனுஷ், நாகார்ஜூனா இருவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் 10 நாட்கள் படமாக்கப்படும் என்கிறார்கள்.