சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியும், இசை அமைப்பாளருமான பவதாரிணி தனது 47 வயதில் சமீபத்தில் காலமானார். பல்வேறு பாடல்களை பாடி உள்ள பவதாரிணி சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பெற்றார்.
2002ம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான 'மித்ர் மை பிரண்ட்' படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். தொடர்ந்து, 'பிர் மிலேங்கே' (இந்தி), 'அமிர்தம்', 'இலக்கணம்', 'மாயநதி' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருந்தார். அவர் மரணம் அடைவதற்கு முன்பு கடைசியாக இசை அமைத்த படம் 'புயலில் ஒரு தோணி'.
பி.ஜி.பிக்சர்ஸ் சார்பில் ரோமிலா நல்லையா தயாரித்துள்ள படம். புதுமுகங்கள் விஷ்ணு பிரகாஷ், அர்ச்சனா சிங் மற்றும் ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தை ஈசன் இயக்கியிருக்கிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது, “பெண்களுக்கு ஆதரவான ஒரு குரலாக இந்தப்படம் உருவாகியிருக்கிறது. நான் கதையை தேர்வு செய்யும் முன்பாகவே பவதாரிணியை தான் இசையமைப்பாளராக வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். நான் முழுபடத்தையும் முடித்த பின்பு பவதாரிணியை நேரில் சந்தித்து முழு படத்தையும் திரையிட்டு காட்டினேன். அவருக்கும் மிகவும் பிடித்து போனது. உடனே இசையமைக்க ஒத்துக் கொண்டார்.
படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள். இரண்டையும் கவிஞர் சினேகன்தான் எழுதியுள்ளார். ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் குமாரும், மானசியும் பாடியுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். சகோதரி இசை அமைப்பில் உருவான கடைசி பாடலை அவர் பாடினார் என்பது வரலாற்று சிறப்பு மிக்க ஒன்று. மேலும், பின்னனி இசையை மிக நேர்த்தியாகவும், சிறப்பாகவும் அமைத்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இசையில் வெளிவரும் படம் என்பதால் மிகுந்த ஆர்வமாக இருந்தார். ஆனால் படம் வெளிவருவதிற்கு முன்பாக இவ்வாறு நிகழும் என்று துளி அளவும் நினைத்து பார்க்கவில்லை. இப்போதும் எங்களால் அவர் இல்லை என்பதை நம்பமுடியவில்லை. எங்கள் திரைப்படத்தின் மிக பெரிய பலம் அவர், பவதாரிணி கிரீடத்தில் உள்ள வைர கல். எங்கள் படத்தின் வெற்றியை அவருக்கு கூடிய விரைவில் அர்ப்பணிப்போம்” என்றார்.