தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' |
தமிழ் சினிமாவில் தற்போதைய வசூல் நடிகர்களில் முன்னணியில் இருக்கும் விஜய், அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கான விண்ணப்பத்தை வழங்கிவிட்டார். அதனால், அவருடைய அரசியல் பயணம் ஆரம்பமாகிவிட்டது. முழு அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக சினிமாவில் நடிப்பதிலிருந்து முழுமையாக விலகப் போவதாகவும் நேற்று வெளியிட்ட அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் 68வது படமாக வெங்கட் பிரபு இயக்கி வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்று கூட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள படப்பையில் நடைபெற்றது. இந்தப் படத்தையடுத்து அவரது 69வது படத்துடன் நடிப்பிலிருந்து விலக உள்ளார். இந்த 69வது படத்தை 'ஆர்ஆர்ஆர்' படத்தைத் தயாரித்த தெலுங்கு தயாரிப்பாளரான டிவிவி தனய்யா தயாரிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
இதுவரையிலும் தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்து வந்தவர் விஜய். அவருடைய பெரும்பாலான வெற்றிப் படங்களைத் தமிழ்த் தயாரிப்பாளர்கள்தான் தயாரித்துள்ளார்கள். அவ்வப்போது தெலுங்கு தயாரிப்பாளர்களின் தயாரிப்பிலும் அவர் நடித்துள்ளார். இந்நிலையில் விஜய் நடிக்க உள்ள அவரது கடைசி படமான 69வது படத்தின் தயாரிப்பாளர் ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் என்பது தமிழ்த் திரையுலகில் ஒரு சலசலப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
விஜய்யின் திரையுலகப் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த 'பூவே உனக்காக' படத்தைத் தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது தயாரிப்பில் விஜய் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. அந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகர் ஜீவா கூட அது குறித்த தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார். அந்நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடித்து வெளிவந்த 'லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், திருப்பாச்சி, ஜில்லா,' ஆகியவையும் வெற்றிப் படங்கள்தான்.
இந்நிலையில் அந்நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடிக்க முடியாமல் போனால் அது சிறந்த நன்றிக் கடனாக இருக்காது. அவரது கடைசி படம் அந்நிறுவனத்தின் தயாரிப்பில் இருப்பதே சிறப்பாக இருக்கும் என தமிழ்த் திரையுலகில் பேச்சுகள் வரலாம். தனக்காக பல வெற்றிகளைத் தந்த தயாரிப்பாளரை விஜய் கைவிட மாட்டார் என்று நம்புவோம்.