டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

அறிமுக இயக்குனர் அருள்செழியன் இயக்கத்தில், அந்தோணிதாசன் இசையமைப்பில், யோகிபாபு, விதார்த் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'குய்கோ'. இப்படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் மிகவும் பாராட்டினர். படத்திற்கான விமர்சனங்களும் பாராட்டும்படியே வந்தது.
ஆனால், படத்தின் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வேலையை சரியாகச் செய்யவில்லை. கடந்த வாரம் 24ம் தேதி வெளியான இப்படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பை அதற்கு சில நாட்களுக்கு முன்பு 21ம் தேதிதான் வெளியிட்டார்கள். இப்படி ஒரு படம் வந்தது பலருக்கும் தெரியவில்லை. தமிழகத்தின் பல முக்கிய ஊர்களில் கூட இப்படம் வெளியாகவில்லை.
இந்நிலையில் படத்தின் இயக்குனரான அருள்செழியன் நேற்று அவரது பேஸ்புக்கில், “குய்கோ திரைப்படத்தை ஆதரித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி...
ரசிகர்களின் ஆதரவு இருந்தும், பாராட்டுகள் குவிந்தும் குய்கோவை தயாரித்த நிறுவனத்தினர் அதை வலுக்கட்டாயமாக 'பீரிசர் பாக்சில்' வைத்து ஆணி அடித்து, உயிரோடு அஞ்சலிக்கு வைத்து விட்டார்கள்..
'குய்கோ'விற்கு என் வீர வணக்கம்..
பிகு : துணை நின்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி பதிவு மூன்றாம் நாள் காரியம் முடிந்ததும் வெளியிடப்படும். . …,” என தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.




