டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'சலார்'. இப்படம் பான் இந்தியா படமாக டிசம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படம் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் பிரசாந்த் நீல். “சலார்' படத்தின் மையக் கரு நட்பு பற்றியது. நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறியதுதான் கதை. நண்பனாக இருந்து எதிரியாக மாறுபவராக மலையாள நடிகர் பிருத்விராஜ் நடித்திருக்கிறார். பிரபாஸ் காதலியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் முழுமையான கதையின் பாதியும், இரண்டாவது பாகத்தில் அடுத்த பாதியும் இடம் பெறும். கதையில் பல விஷயங்கள் இருப்பதால்தான் இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டோம்.
'கேஜிஎப்' படத்துடன் ஒப்பிடும் போது இது முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும். இரண்டு படத்திலும் வெவ்வேறு உணர்வுகள், கதைகள். கதை சொல்லப்படும் விதத்தையும் ஒப்பிட முடியாது. எந்த விதத்திலும் 'கேஜிஎப்' படத்தின் கதையுடன் இப்படம் இணையவில்லை. 'சலார் 2' படம் எப்போது ஆரம்பமாகும் எனத் தெரியாது,” என்றும் அப்பேட்டியில் கூறியிருக்கிறார் பிரசாந்த் நீல்.
'சலார்' படம் வெளியான பின்பு ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார் பிரசாந்த். இந்தப் படத்துடன் 'கல்கி 2898 ஏடி,' மற்றும் மாருதி இயக்கும் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் பிரபாஸ். அந்தப் படங்களை முடித்த பின் 'சலார் 2' பக்கம் வருவாரா, அல்லது இன்னும் தள்ளிப் போகுமா என்பது 'சலார்' வெளியீட்டிற்குப் பிறகே தெரிய வரும்.




