டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி, ஜப்பான் படங்களை இயக்கிய ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள படம் 'பராரி'. ராஜு முருகனிடம் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இப்படத்தை இயக்கியுள்ளார்.
'தோழர் வெங்கடேசன்' படத்தில் நடித்த ஹரிசங்கர் கதாநாயகனாகவும், புதுமுகம் சங்கீதா கல்யாண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார், ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் எழில் பெரியவேடி கூறியதாவது: 'பராரி' என்பது தங்கள் சொந்த இடங்களிலிருந்து, பல்வேறு இடங்களுக்குத் தங்களுடைய வாழ்க்கைக்காக போகும் மக்களைக் குறிக்கிறது. திருவண்ணாமலையை சுற்றி இருக்கும் அந்த நிலத்தின் எளிய மக்களின் வாழ்க்கை முறையையும் அவர்களுக்கான அரசியலையும் 'பராரி' பேசுகிறது. சாதி, மொழி, மதத்தை வைத்து சமூகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமகால அவலங்களை இந்தப் படம் பேசுகிறது. சாதி மதம் மொழியை வைத்து அரசியல் செய்யும் இந்த மானுட சமூகத்தை அறத்தோடு கேள்வி கேட்கும் விதமாக இந்தப் படம் இருக்கும். திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்கள், பெங்களூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் 45 நாட்களுக்குள் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. என்றார்.




