ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛துருவ நட்சத்திரம்'. ரிது வர்மா, சிம்ரன், பார்த்திபன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 5 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இந்த படம் ஒரு வழியாக இன்று(நவ., 24) வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கவுதம் மேனன் தர வேண்டிய ரூ.2.40 கோடி பணத்தை திருப்பி செலுத்தாததால் படம் வெளியாகவில்லை. இன்று காலைக்குள் அந்த நிறுவனத்திற்கு ரூ.2 கோடி பணத்தை தர சென்னை ஐகோர்ட் கெடு விதித்து இருந்தது. ஆனால் அவர் செலுத்தவில்லை. இதனால் படம் இன்று வெளியாகவில்லை என கவுதம் மேனன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட பதிவில், ‛‛மன்னிச்சுருங்க... 'துருவ நட்சத்திரம்' படத்தை இன்று வெளியிட முடியவில்லை. எங்களால் முயன்ற முயற்சிகளை செய்தோம். ஆனால் இன்னும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. இந்த படத்திற்கான உங்களின் ஆதரவு எங்களை நெகிழ்ச்சி அடைய செய்கிறது. அதுவே எங்களை மேலும் தொடர வைக்கிறது. இன்னும் சில நாட்களில் படத்தை ரிலீஸ் செய்வோம்,'' என தெரிவித்துள்ளார்.