டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ். இதன் உரிமையாளராக இருப்பவர் எஸ்.எஸ்.லலித்குமார். விஜய் நடித்த மாஸ்டர், லியோ, விஜய்சேதுபதி நடித்த துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம் நடித்த கோப்ரா, மகான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
இவரது மகன் விஷ்ணு குமாருக்கு வைஷாலி என்பவருடன் திருமணம் நேற்று சென்னையில் நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இரண்டிலும் தமிழ் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். விஜய் நேரடியாக வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.




