சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் 'பராரி'. இதில் ஹரி சங்கர், சங்கீதா நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். ராஜு முருகன் உதவியாளர் எழில் பெரியவெடி இயக்கி உள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார், ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் எழில் பெரியவெடி கூறும்போது : இந்த படத்தின் களமும், கதையும் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாதது. வட மாவட்டங்களில் இருந்து பராரியாக பெங்களூரு மாந்தோப்புக்கு வேலைக்கு செல்லும் மக்களை பற்றிய கதை. ஜாதி மோதல், தீண்டாமை பற்றி பேசும் படம். கர்நாடக மக்களும், தமிழ் மக்களும் சகோதரன் சகோதரி போன்று வாழ்கிறார்கள். ஆனால் இங்கும், அங்கும் சிலர் அவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். படத்தின் 20 நிமிட கிளைமாக்ஸ் ஒவ்வொரு மனிதர்களையும் உலுக்கி விடும். ஜாதி, மதங்களை தாண்டிய மனிதம்தான் ஆகப்பெரிய சக்தி, என்பதை சொல்லும் படமாக உருவாகி உள்ளது. என்றார்.