தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பொன்னி உள்ளிட்ட தொடர்கள் மூலம் பிரபலமானவர் நடிகை தர்ஷிகா. பிக் பாஸ் 8வது சீசன் மூலம் மேலும் பிரபலமடைந்தார். தற்போது அவர் 'தி டார்க் ஹெவன்' என்ற படத்தில் நடித்துள்ளார். கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ்.எம்.மீடியா பேக்டரி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சித்து, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, அருள் ஜோதி, ஜெயக்குமார், ஷரண், ஜானகிராமன் ,விஜய் சத்யா, ஆர்த்தி, சுமித்ரா, அலெக்ஸ், தீபன், சிவ சதீஷ், டேனி மற்றும் பலர் நடித்துள்ளனர். பாலாஜி இயக்கி உள்ளார்.
தர்ஷிகா கூறும்போது "எனது கனவு நனவாகி இருக்கிறது. நான் பிக்பாஸ் மூலம் பிரபலமானேன். ஆனால் பிக்பாஸில் வந்து விட்டால் மட்டுமே வாய்ப்பு கிடைத்துவிடாது. சினிமாவில் தாகத்தோடு வருபவர்கள் கண்டிப்பாக அந்த இடத்தை அடையலாம். பிக்பாஸில் இருந்து வந்து விட்டோம் படம் பண்ண போகிறோம் என்று நான் நினைக்கவில்லை. அது ஒரு பிளாட்பார்ம், இது ஒரு பிளாட்பார்ம் அவ்வளவுதான் . நம்பிக்கையோடு இந்தத் தளத்திற்கு வந்திருக்கிறேன். வெற்றி பெறுவேன் என்று நினைக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை வாய்ப்பு கதவை தட்டாது, நாம் தேடிப் போனால் தான் வரும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் நிறைய கற்றுக் கொண்டேன். இதில் உமையாள் என்கிற பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நல்ல தமிழ்ப் பெயர். அந்தப் பெயர் எனக்குப் பிடிக்கும். அனைவரது கனவும் இதில் இருக்கிறது. படம் வெற்றி பெறும்" என்றார்.