ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மதியம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்களுக்கு மதிய விருந்து அளித்தார். இரவு சினிமா பிரபலங்களுக்கு பார்ட்டி வைத்து தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
அம்மாவின் சிகிச்சைக்காக சென்னையில் தங்கியிருக்கும் ஹிந்தி நடிகரான ஆமீர்கான் நேற்றைய கமல்ஹாசன் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்களை 'தக் லைப்' படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன், இயக்குனர், நடிகர் பார்த்திபன் ஆகியோர் பகிர்ந்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் பகிர்ந்த புகைப்படத்தில் சூர்யாவும், ஆமீர்கானும் இருக்கிறார்கள். 'கஜினி' ஹிந்திப் படத்திற்கு ரவி கே சந்திரன் தான் ஒளிப்பதிவாளர். அவருடைய பதிவில், “கமல்ஹாசன் பிறந்தநாள் பார்ட்டியில் இரண்டு கஜினிகள் ஒரே பிரேமில்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆமீர்கானுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பார்த்திபன், “இந்தி'ய திரையுலகில் அவருடைய படங்கள் மூலம், மிக உயர்வாக மதிக்கப்படும் சிறந்த நடிகர். ஒவ்வொரு முறையும் என்னை ஆச்சர்ய ஆனந்தத்தில் திளைக்க வைக்கும் மனிதர். நேற்றிரவு கமல் சார் பிறந்த நாளில் … நடப்பவை(பவங்)களை ஒரு ஒதுக்கு புறமாக நின்று ரசித்துக் கொண்டிருந்த என்னை கண்டு ஓடி வந்து இறுக அனைத்துக் கொண்டு நெற்றியில் என்னவென்று விசாரித்து, தன்னுடைய தாயாருக்கு உடல்நிலை சுகமில்லை என வருந்தி, அடுத்த படமென்ன?- தெரிந்துக் கொண்டு, பின்னர் திரும்பிச் செல்கையில் மறக்காமல் வந்து சொல்லிவிட்டு சென்றார்.
எங்கே சென்றார் ? இதயத்தின் நாற்புறமும் ஆணியடித்து அங்குமிங்கும் நகரா நாற்காலியிட்டு அமர்ந்துக் கொண்டார். இத்தனைக்கும் சிற்சில சந்திப்பே இதற்குமுன்…
என் விடாமுயற்சிகளை பற்றி கேட்டறிந்து என்னை அவர் பாராட்டவும், அவரின் நல்ல படங்களை நான் புகழவும் பழகினோம்.
அவரின் அற்புத நட்பு அலாதியானது. மணி சார் + கமல் சார் + ரஹ்மான் சார் + ரவி k சந்திரன் கூட்டனி மிரட்டியது 'thug life'-ல்!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.