ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மாநில அளவில் ரசிகர்களை சந்திக்க, நடிகர் விஜய் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்காக இடம் தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த லியோ பட வெற்றி விழாவில், அவர் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், ஏராளமான ரசிகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனது. இது, ரசிகர்களுக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மாநில அளவில் ரசிகர்களை சந்திக்க விஜய் முடிவு எடுத்து உள்ளார். அரசியல் கட்சி மாநாட்டை போல, இந்த சந்திப்பு அமைய வேண்டும். தன் பலத்தை அரசியல் கட்சிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என, மன்ற நிர்வாகிகளிடம் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு இடம் தேடும் பணியில் மன்ற நிர்வாகிகள் இறங்கி உள்ளனர். மதுரை அல்லது திருச்சியில் இந்த சந்திப்பு நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிகழ்ச்சியில், ரசிகர் மன்ற நிர்வாகிகள் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
புதிய படத்தில் நடிக்கும் விஜய், வெளிநாட்டில் அதன் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து தமிழகம் திரும்பியதும், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இந்த நிகழ்ச்சியை நடத்த ஆலோசனை நடந்து வருகிறது.