நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு , பிரித்விராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் சலார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே சிலமுறை தள்ளி வைக்கப்பட்ட நிலையில் கடைசியாக டிசம்பர் 22ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவித்தனர். ஆனால் கடந்த சில தினங்களாக அடுத்த ஆண்டுக்கு சலார் படத்தை தள்ளி வைக்க திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி பரவி வந்தது.
இதற்கு காரணம் ஷாரூக்கானின் ‛டன்கி' படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாக இருப்பதாக உறுதிப்படுத்தி உள்ளனர். அதன் காரணமாகவே சலார் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றுவதற்கு திட்டமிட்டிருப்பதாக செய்தி பரவியது. ஆனால் சலார் படத்தை தயாரித்து வரும் பட நிறுவனம் அதை மறுத்துள்ளது. திட்டமிட்டபடி டிசம்பர் 22ல் சலார் திரைக்கு வரும் என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதிப்படுத்தி உள்ளனர்.