காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
நாடக நடிகர், சினிமா நடிகர், வசனகர்த்தா... என பன்முக திறமையாளர் கிரேஸி மோகன். டைமிங் காமெடியில் இவரை அடிச்சுக்க ஆளே கிடையாது எனலாம். அந்தளவுக்கு இவரின் நகைச்சுவை பிரபலமானவை. குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் உடன் இவர் இணைந்து பணியாற்றிய படங்களும், அதன் காமெடிகளும் இன்றும் மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. கடந்த 2019ல் திடீர் மாரடைப்பு காரணமாக இந்த மண்ணை விட்டு மறைந்தார்.
கிரேஸி மோகனுக்கு இன்று பிறந்தநாள். அவரைப்பற்றி நடிகர் கமல் வெளியிட்ட பதிவில், ‛‛என் அன்புக்குரிய நண்பர் கிரேசி மோகனின் பிறந்த நாள் இன்று. நகைச்சுவை உணர்வைத் தோலாகத் தகவமைத்துக் கொண்டிருந்த மனிதர். அந்தத் தோலுக்குள்ளே, ஆழ்ந்த மரபிலக்கியப் பயிற்சி, தொன்மம் தொடர்பான அகன்ற வாசிப்பு, தீவிர உணர்வுகளின் கனம் உணரும் திறன் அத்தனையும் கொண்டிருந்தவர். அதனாலேயே எங்களுக்கெல்லாம் சமகாலத்து சாக்லேட் கிருஷ்ணனாக இருந்தவர்,'' என குறிப்பிட்டு அவருடன் இருக்கும் பழைய போட்டோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.