அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு |
கேடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தற்போது ஹிந்தியிலும், வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினி உடன் இவர் நடித்த ‛ஜெயிலர்' படம் ஹிட்டானது. அதிலும் அவர் ஆடிய ‛காவாலா' பாடல் உலகம் முழுக்க பிரபலமானது.
ஏற்கனவே பல்வேறு விளம்பரங்களிலும், சில நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் இருந்து வருகிறார் தமன்னா. இப்போது ஜப்பானின் அழகு சாதன நிறுவனமான ஷிஷீடோவின் இந்திய விளம்பர தூதராகி உள்ளார். இந்த நிறுவனத்திற்கு தூதரான முதல் இந்தியர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி தமன்னா கூறுகையில், ‛‛நூற்றாண்டை கடந்து நிற்கும் ஷிஷீடோ நிறுவனத்துடன் இணைந்தது மகிழ்ச்சி. அழகு என்பது வெளிப்புற தோற்றம் அல்ல, தங்களது சொந்த மேனியின் நிறத்தில் தன்னம்பிக்கை பெறுவது'' என குறிப்பிட்டுள்ளார்.