மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தெலுங்கு தயாரிப்பாளர், டைரக்டர் உட்பட சிலரை சில மாதங்களுக்கு முன், ஐதராபாத்தில் போலீஸார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நடிகர் நவ்தீப்புக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரைத் தேடி வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தெலுங்கு சினிமாவில் பரபரப்பானது. ஆனால் அதனை நவ்தீப் மறுத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நவ்தீப் வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணிவரை சுமார் 6 மணிநேரம் இந்த விசாரணை நடந்தது. நவ்தீப்பின் செல்போனை கைப்பற்றிய போலீசார், அதிலிருந்த தகவல்கள் அளிக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதனால் அதனை மீட்டெடுக்க சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை முடிந்து வெளியில் வந்த நவ்தீப் நிருபர்களிடம் கூறும்போது “இந்த வழக்கில் பிரதான சந்தேக நபரான ராம்சந்தர் எனது நண்பர். அதனால்தான் விசாரித்தனர். 8 வருடங்களுக்கு முன் நடந்த தொலைபேசி அழைப்புகள் உட்பட பழைய வழக்கு தொடர்பான விவரங்களைக் கேட்டனர். அவர்கள் சுமூகமாக விசாரித்தார்கள். நான் தெளிவாகவும் மகிழ்ச்சியாகவும் பதிலளித்தேன்” என்றார்.