இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
பிரபல தெலுங்கு இளம் நடிகர் நவ்தீப். அங்கு 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் அறிந்தும் அறியாமலும், ஏகன், சொல்ல சொல்ல இனிக்கும், இது என்ன மாயம், சீறு உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சில நைஜீரிய இளைஞர்களையும், தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களையும் போலீசார் கைது செய்தனர். போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் நடிகர் நவ்தீப்பிற்கும் தொடர்பு இருப்பதாக அப்போதே பேசப்பட்டது. ஆனால் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
சமீபத்தில் பேட்டி அளித்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், விரைவில் நவ்தீப்பிடம் விசாரணை நடத்த இருப்பதாக அறிவித்தார். இதை தொடர்ந்து நவ்தீப் தனக்கும் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், போலீஸ் அதிகாரி குறிப்பிட்ட நவ்தீப் நான் இல்லை என்றும் அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகு இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்று தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள நவ்தீப் வீட்டில் நேற்று போதைப்பொருள் தடுப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது நவ்தீப் வீட்டில் இல்லை. இந்த சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியதாகவும், போதைப் பொருள் வழக்கில் ஏற்கனவே கைதான ராம்சந்த் என்பவரிடம் இருந்து நவ்தீப் போதைப் பொருள் வாங்கியதாகவும் போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.