அல்லு அர்ஜுன் பட வாய்ப்பு: 'நோ' சொன்ன பிரியங்கா சோப்ரா; காரணம் என்ன ? | 3 நாளில் 100 கோடி கடந்த 'குட் பேட் அக்லி' | பிளாஷ்பேக்: ஜெயலலிதாவின் வெள்ளித்திரைப் பயணத்திற்கு வெளிச்சம் காட்டிய “வெண்ணிற ஆடை” | புதிய காதலியுடன் விழாவில் ஆமீர்கான் | பராசக்தி, தேவதையை கண்டேன், கிங்ஸ்டன் - ஞாயிறு திரைப்படங்கள் | அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் |
தமிழில் அறிந்தும் அறியாமலும், நெஞ்சில், ஏகன், சொல்ல சொல்ல இனிக்கும் அஆஇஈ, இது என்ன மாயம், சீறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்வர் நவ்தீப். ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் போதை பொருள் அதிரடி சோதனை நடந்து பல திரைப்பட நட்சத்திரங்கள், நடிகர், நடிகைகள் சிக்கினர். அப்போது நவ்தீப்பிற்கும் இதில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
ஒரு போலீசார் அதிகாரி, இந்த வழக்கு தொடர்பாக நவ்தீப்பிடம் விசாரணை நடத்த இருப்பதாக சமீபத்தில் கூறினார். இந்த தகவலை நவ்தீப் மறுத்தார். போலீசார் தேடும் நவ்தீப் நான் இல்லை. எனக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பில்லை என்று மறுத்து அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில் தெலுங்கானா உயர்நீதி மன்றத்தில் நவ்தீப் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில் போதைப்பொருள் கும்பலுடன் தனக்கு தொடர்பு இல்லை என்றும், போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து நவ்தீப்பை கைது செய்ய போலீசாருக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.