ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
புதுடில்லி: இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன தலைவராக நடிகர் மாதவன் பொறுப்பேற்க உள்ளார்.
நடிகர் மாதவன் இயக்கிய ராக்கெட்ரி படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது. இந்நிலையில் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக்தாக்கூர் சமூக வலைதளத்தில் எப்.டி.ஐ.ஐ., குழு தலைவராக பரிந்துரைக்கப்பட்டு உள்ள நடிகர் மாதவனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பரந்த அனுபவமும் வலுவான நெறிமுறைகளும் இந்த நிறுவனத்தை வளப்படுத்தும், நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வந்து, மேலும் உயர் நிலைக்கு கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன். உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டு உள்ளார்
அவருக்கு பதில் அளித்துள்ள நடிகர் மாதவன் "கவுரவத்திற்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி. எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என சமூக வலை தளம் மூலம் பதில் அளித்துள்ளார்.