லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
'லியோ' படத்தில் நடித்து முடித்த பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது படத்தில் நடிக்க உள்ளார் நடிகர் விஜய். நேற்று வெங்கட் பிரபுவின் டுவிட்டர் தளத்தில், “ஆக, அடுத்து என்ன… நாளை காலை 11 மணி வரை காத்திருங்கள்,” என்று பதிவிட்டிருந்தார்.
ரசிகர்கள் பலரும் அது விஜய்யின் 68வது படம் பற்றி ஏதாவது ஒரு அப்டேட் ஆக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால், அது 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற வேறொரு படம் பற்றிய அறிவிப்பாக இருந்தது. வெங்கட் பிரபுவின் அன்பளிப்பு என அப்படத்தைப் பற்றி வெங்கட் பிரபு குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் பதிவில் ரசிகர் ஒருவர், “விஜய் 68 படம் பற்றிய அப்டேட் என நினைத்தேன், இருந்தாலும், வாழ்த்துகள்” என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, “விஜய் 68 அறிவிப்பு, சும்மா தெறிக்கும், காத்திருங்கள்,” என்றார்.