போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‛லியோ'. நேற்று தான் தன் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு காட்சிகளை விஜய் நிறைவு செய்தார். அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போகிறார். சினிமாவில் நடித்து வந்தாலும் மற்றொருபுறம் தன் எதிர்கால அரசியல் பயணம் தொடர்பான விஷயங்களை தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் அவ்வப்போது விஜய் ஆலோசனை செய்து வருகிறார்.
சமீபத்தில் முக்கிய தலைவர்கள் சிலைக்கு மாவட்டம் வாரியாக மாலை அணிவிக்க சொல்லி உத்தரவிட்டார். தொடர்ந்து 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை அழைத்து பாராட்டினார். இந்நிலையில் இன்று(ஜூலை 11) தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதுதொடர்பாக மாவட்ட வாரியாக உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விஜய்யின் பனையூர் இல்லத்தில் இந்த கூட்டம் காலை 9 மணிக்கு மேல் துவங்கியது. தொடர்ந்து மதியம் 2:30 மணிக்கு விஜய் வருகை தந்தார். தன் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். மதிய உணவு விருந்தும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுடன் இணைந்து போட்டோவும் எடுக்கிறார். இன்றைய கூட்டத்தில் 15 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரசியல் தொடர்பான விஷயங்கள் இந்த கூட்டத்தில் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு பார்லிமென்ட் தேர்தல் நடக்கிறது. இதுபற்றியும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் அடுத்தடுத்த ஒவ்வொரு நகர்வுகளும் அரசியல் நோக்கியே பயணிப்பதை வெளிகாட்டுகிறது.